
பேத்தியின் ஆசை
இந்த மாடர்ன் லுக் போட்டோ ஷூட் மூலம் தனது பேத்தியின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறாராம் நடிகர் ராதா ரவி. திரைத்துறையில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் ராதா ரவியின் பேத்தியான பவித்ரா சதீஷுக்கு, தனது தாத்தா ராதா ரவிக்கு ஆடை வடிவமைத்து கொடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்நிலையில் தான் வடிவமைத்த ஆடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்துமாறு தனது தாத்தா ராதா ரவியிடம் கேட்டுள்ளார் பவித்ரா சதீஷ்.
Yashika Annand: நட்ட நடு ரோட்டில் அப்படி ஒரு போஸ்.. யாஷிகாவால் சூடாகும் இணையம்!
குழந்தை மனசுங்க

பேத்தியின் ஆசைக்காக மறுப்பு தெரிவிக்க மனம் வராத நடிகர் ராதா ரவி, பவித்ரா சதீஷ் பிரத்யேகமாக வடிவமைத்த ஆடைகளை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள், வில்லன் நடிகராக இருந்தாலும் அவரும் மனிதர்தான். அவருக்கும் குழந்தை மனசு உள்ளது, பேத்தியின் ஆசையை உடனே நிறைவேற்றிவிட்டாரே என புகழ்ந்து வருகின்றனர். அரசியலில் தீவிரமாக உள்ள நடிகர் ராதா ரவி தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன்: அறம் எங்கே செல்லுபடியாகும்… டிவிட் போட்டு வாங்கிக்கட்டும் கமல்!