
நேர்மாறாக பல எதிர்மறை விமர்சனங்கள் தான் கிடைத்தன. இதனால் மனவேதனையில் இருந்து விஜய் தொடர்ந்து போராடி இன்று இந்த நிலையை அடைந்துள்ளார். தற்போதைக்கு அவரது படங்களின் அறிவிப்பு வருவதற்கு முன்பே பல கோடிகளுக்கு வியாபாரமாகி வருகிறது. விஜய்யின் படங்களின் விமர்சனங்கள் முன் பின்னாக இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இதன் காரணமாகவே அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாக விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பேச்சு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் வெடித்து வருகின்றன.
உண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இவ்வாறு போய்க்கொண்டிருக்க விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் ரஜினி ஏன் சூப்பர்ஸ்டாராக இருக்கின்றார் என்பது பற்றி பேசினார். அவர், எளிமையை ரஜினி எவ்வளவு உயர்ந்தாலும் எப்போதும் கடைபிடிக்கிறார்.
இரவு தூங்குவதற்கு முன்பு தான் எங்கிருந்து எவ்வளவு போராடி இந்த இடத்திற்கு வந்தோம் என்பதை நினைத்து பார்க்கின்றார். மேலும் அனைவரிடமும் எதார்த்தமாக எந்த தலைக்கனமும் இன்றி பழகுகிறார். இதன் காரணமாகவே அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கின்றார் என்றார் எஸ்.ஏ சந்திரசேகர்.