
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான ஆர்சிபிட்வீட்ஸ் (RCBTweets) ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.
ஹேக் செய்தவர்கள் அதன் முகப்புப் படத்தை மாற்றியுள்ளனர். அது ஒரு சிரிக்கும் எலும்புக்கூடு முகம் போல் உள்ளது. அது மட்டுமல்லாது ஆர்சிபிட்வீட்ஸ் என்ற கணக்கின் பெயரையும் ‘போர்ட் ஏர் யாட் கிளப்’ என்று மாற்றியுள்ளனர். NFT சம்பந்தமான ட்வீட்களை அதில் பதிவிட்டுள்ளனர்.
இணையவாசிகள் ஆர்சிபி ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதை அறிந்து உடனடியாக அது குறித்த பதிவுகளை ட்விட்டரில் வைரலாக்கினர்.
ஆர்சிபி ட்விட்டர் பக்கத்தை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடைசியாக அதில் ஒரு புரோமோஷனல் வீடியோவை ஆர்சிபி பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.