
தனுஷ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் மயக்கம் என்ன. திசைமாறும் கணவரை பக்க பலமாக இருந்து சாதிக்க வைப்பார் நாயகி. ஆணோ, பெண்ணோ கணவன் மனைவிக்குள் சமரசமில்லாத ஆதரவு தேவை என்பதை அப்படம் சொல்லும். அப்படியான நிஜ கதைகள் சமூகத்தில் பல நடந்துள்ளன.
தொழிலதிபரும் ஃபிளாட் ஹெட்ஷூஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான திரு கணேஷ் பாலகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை பற்றி, ட்விட்டர் வாசி ஒருவர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கணேஷ் பாலகிருஷ்ணன் பற்றியும், அவர் எவ்வாறு தன் மனைவி வேலைக்குச் சென்று அவருக்குப் பக்க பலமாக இருந்தார் என்பதைப் பற்றி பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் மட்டுமல்ல இவரை தவிர மேலும் இரண்டு வெற்றிகரமான தொழிலதிபர்களும் தங்களது மனைவியிடம் இருந்து பொருளாதார ரீதியான உதவிகளை பெற்று தான் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் எட்டியுள்ளனர்.
உதாரணத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் திரு. நாராயண மூர்த்தி அவர்கள் இன்போசிஸ் நிறுவனம் தொடங்கும் போது, தன்னுடைய மனைவியின் பணத்தில் முதலீடு செய்து தான் ஆரம்ப காலத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அவரின் மனைவி திருமதி. சுதாமூர்த்தி அவர்கள் தான் பத்தாயிரம் ரூபாயை தனது கணவருக்குக் கடனாகக் கொடுத்து, இன்போசிஸ் நிறுவனத்தின் முதன்முதலில் முதலீடு செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
“மனைவி கமதி ஹை, மை உடதா ஹு”
(என் மனைவி சம்பாதிக்கிறாள், நான் செலவு செய்கிறேன்)கணேஷ் பாலகிருஷ்ணன் (@கணேஷ்பி78) வெட்கச் சிரிப்புடன் இதைச் சொன்னார் @sharktankindia. உங்கள் மனைவியின் சம்பளத்தில் வாழ்வது நமது இந்திய சமூகத்தில் எப்படி இழிவாக பார்க்கப்படுகிறது என்பதை நான் உணர்ந்தேன்🧵
(1/4) pic.twitter.com/SR5jV4XgfL
– ரிச்சா சிங் (@RichaaaSingh) ஜனவரி 8, 2023
மற்றுமொரு உதாரணமாக ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சிஐஓ ஆன பாவிஷ் அகர்வாலுக்கு அவருடைய மனைவி ராஜலக்ஷ்மி அகர்வால் பொருளாதார ரீதியாக பல வழிகளில் உதவி செய்துள்ளார். ஓலா நிறுவனம் தனது ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தனது மனைவியின் காரை கடன் வாங்கி தான் பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாகவும், தனது ட்விட்டர் பதிவில் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
இவர்களைத் தவிர மற்றும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்களும் ஆரம்ப காலகட்டங்களில் தங்களது மனைவியின் உதவியைக் கொண்டுதான் வாழ்வில் வெற்றி பெற்றுள்ளனர். உங்களது வாழ்க்கைத் துணையை பொறுத்து தான் உங்களது வேலை மற்றும் தொழில் சிறப்பாக அமையும் என்றும் அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான நிலவி வரும் சமூக சிந்தனைகளை உடைத்து மிகவும் முற்போக்கான சிந்தனையுடன் உள்ள அந்த பெண்மணிக்கு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த பதிவிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: