
ரெசிஷன்
உலகளவில் ரெசிஷன் இருக்கும், இது பல நாடுகளைப் பாதிக்கிறது எனவும், ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்தியாவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய அரசின் கூட்டங்களில் நடந்த விவாதத்தில் நான் சேகரித்தது இதுதான் என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை
தற்போது, உலகில் பல்வேறு வளர்ந்த நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வது உண்மைதான். ஜூன் மாதத்திற்குப் பிறகு மந்தநிலை இந்தியாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மக்கள்
ரெசிஷன் பாதிப்பு இந்தியா மக்களைத் தாக்காமல் இருக்க மத்திய அரசு. பிரதமர் மோடியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் மத்திய MSME துறை அமைச்சர் நாராயண் ரானே ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

MSME அமைச்சர் நாராயண் ரானே
மத்திய MSME துறை அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் இரண்டு நாள் G20 உள்கட்டமைப்பு பணிக்குழு (IWG) கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது ANI-க்கு அளித்த பேட்டியில் உலகில் பல்வேறு வளர்ந்த நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வது உண்மைதான். ஜூன் மாதத்திற்குப் பிறகு மந்தநிலை இந்தியாவுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

G20 IWG கூட்டம்
MSME துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரானே கூறினார். இரண்டு நாள் G20 IWG கூட்டத்தைத் தொடக்கிவைக்கும் போது புனேவில் இருக்கும் வளமான வர்த்தக வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.நீண்ட கால மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஜி20 கூட்டம் முக்கியமானது என்று ரானே வலியுறுத்தினார்.

G20 தலைமை பதவி
இந்தியா தற்போது G20 தலைமைப் பதவியை டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை நடத்துகிறது. IWG உறுப்பு நாடுகள், விருந்தினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 65 பிரதிநிதிகள் இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழ் 2023 உள்கட்டமைப்பு நிகழ்ச்சி நிரலைப் பற்றி விவாதிக்கப் புனேவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

இந்தியா
கடந்த 8 ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது என்று மத்திய MSME துறை அமைச்சர் நாராயண் ரானே ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புனே கூட்டம்
புனேவில் நடைபெறும் கூட்டத்தைப் பொருளாதார விவகாரங்கள் துறை, ஆஸ்திரேலியா மற்றும் நிதியம் மற்றும் இந்திய அரசு, பிரேசில் இணைத் தலைவர்களாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் கருப்பொருள் “நாளைய நிதியுதவி நகரங்கள்: உள்ளடக்கிய, நெகிழ்ச்சியான மற்றும் நிலையானது.”