
Spotify நிறுவனம்
Spotify நிறுவனத்தில் அனைத்து மட்டத்திலும் நிர்வாகம் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் இதன் ஒரு பகுதியாக 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் அதன் தலைமை கண்காணிப்பாளர் மற்றும் வணிக அதிகாரியான Dawn Ostroff நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

9800 மொத்த ஊழியர்கள்
செப்டம்பர் 30 வரையிலான வகுப்பு Spotify நிறுவனத்தில் சுமார் 9800 பேர் முழுநேர ஊழியர்களாக இருந்தனர். தற்போது அறிவிக்கப்பட்ட பணிநீக்கம் மூலம் துண்டிப்பு ஊதியம் தொடர்பாக சுமார் 35 மில்லியன் யூரோக்கள் ($38.06 மில்லியன்) முதல் 45 மில்லியன் யூரோக்கள் வரையிலான தொகையாகும்.

உயர் அதிகாரி
Spotify நிறுவனத்தில் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் அதன் தலைமைக் கண்காணிப்பாளர் மற்றும் விளம்பர வணிக அதிகாரியான Dawn Ostroff நிறுவனத்தை விட்டு வெளியேறிய அறிவிப்பு மூலம் பிரீமார்க்கெட் வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் 3.5 சதவீதம் உயர்ந்தன.

தொற்றுநோய் காலம்
இரண்டு வருடம் தொற்றுநோய் காலத்தில் Spotify நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. இக்காலகட்டத்தில் Spotify நிறுவனம் மட்டும் அல்லாமல் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் கூடுதல் ஊழியர்களைப் பணியில் அமர்த்தினர்.

வர்த்தக வளர்ச்சி
ஆனால் இதற்குப் பின்பு இந்த வர்த்தக வளர்ச்சி நிலையாக இருந்தது மட்டும் அல்லாமல் இது பெரிய அளவில் சரிவை கண்டது. இதனாலே தற்போது Spotify மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் கார்ப் முதல் மெட்டா பிளாட்பார்ம்ஸ் வரையில் ஊழியர்களை ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகிறது.

ஸ்வீடன்
ஸ்வீடன் நாட்டைத் தளமாகக் கொண்ட Spotify, விரைவான வட்டி விகித உயர்வுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் பொருளாதாரப் பாதிப்பால் விளம்பரதாரர்கள் செலவினங்களைக் குறைத்த நிலையில் வருவாயில் ஓட்டை விழுந்த காரணத்தால் பணநீக்கம் செய்யப்பட்டது.

4 பெரிய டெக் நிறுவனங்கள்
உலகின் டாப் 4 பெரிய டெக் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவங்கி 20 ஆம் தேதி மட்டுமே அமேசான் 18000 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பேஸ்புக்
2022ல் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, அமேசான் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.