
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது வலைதளத்தில் ரீடெய்ல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான பல்வேறு புதிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஆப்பிள் நிறுவனத்தின் பார்வை இந்தியாவின் மீது அதிக அளவில் விழா துவங்கியுள்ளது. சீனாவில் இருந்து தனது உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றுவதில் இருந்து, தற்போது இந்தியாவில் ரீடெய்ல் பணியாளர்களுக்கான பணியிடங்கள் முதல் இந்தியாவை குறி வைத்து பல்வேறு புதிய யுத்திகளை கையாண்டு வருகிறது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் கடைசியாக வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மிக அதிக அளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய பக்கத்தின் இந்தியாவின் ரீடயில் பணியாளர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனம். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பணியிடங்களை அந்தப் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு புதிய பணியிடங்களுக்காக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதில் பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பிசினஸ் எக்ஸ்பர்ட், ஆப்பரேஷன் எக்ஸ்பர்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பல்வேறு நிலைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் வெற்றிநடை போட்டு வரும் டெக் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாகவே இந்தியாவில் தனது ரீடைல் ஸ்டோர்களை நிறுவுவதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் அதிகரித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றின் விற்பனையால் இன்றும் அதிக நம்பிக்கையோடு ஆப்பிள் ரீடைல் ஸ்டோர்களை அமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: செல்போனில் விளம்பரம் தொல்லையா? இதை செய்தாலே போதும்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
இதன் காரணமாகத்தான் ரீடைல் ஸ்டோர்களை மிகத் தரமாக அமைப்பது பொருட்டு, பல்வேறு புதிய ரீடைல் ஸ்டோர் பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அந்நிறுவனம்.
ஒருவேளை ஆப்பிள் வெற்றிகரமாக தனது ரீடெய்ல் ஸ்டோர்களின் எண்ணிக்கையை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே ஆப்பிளின் ஐபோன் பாகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றை ஒன்று சேர்க்கும் வேலை நடந்து வரும் நிலையில், ஆப்பிளின் இந்த புதிய செயல்பாடு நிறுவனத்திற்கு எந்த வகையில் கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.