
இந்திய அணி:
இந்நிலையில் தற்போது, இந்த 4 டெஸ்ட் போட்டிகள், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இருவரும் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
‘இந்தியாவுக்கு எதிரான’…4 டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!!எப்பா சாமி..எல்லாரும் அதிரடி வீரர்கள்!
இந்திய டெஸ்ட் அணி (முதல் 2 போட்டிகள்): ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), சுப்மன் கில், சேத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கட், சூர்யகுமார் யாதவ்.
ரிஷப் பந்த் இல்லை:
இத்தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. ஸ்பின்னர்களை சிறப்பாக அட்டாக் செய்து, மிரட்டலாக விளையாடக் கூடியவர். இருப்பினும், சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமாக இவர் நீக்கப்பட்டு மாற்றாக இஷான் கிஷன், கே.எல்.பரத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அசாருதீன் பேட்டி:
இந்நிலையில், ரிஷப் பந்திற்கு சரியான மாற்று வீரர் யார் என்று முகமது அசாருதீன் பேசினார். அதில், ”ரிஷப் பந்திற்கு சரியான மாற்று வீரர் என்றால், அது இஷான் கிஷன்தான். கிஷன் செட்டில் ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்வார். செட்டில் ஆகி, பந்தை பயமில்லாமல் எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டால், ஸ்கோர் கிடுகிடுவென உயர ஆரம்பித்துவிடும். ரிஷப் பந்த் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவாரோ, அதே தாக்கத்தை இவராலும் ஏற்படுத்த முடியும். ரிஷப் பந்தைப் போல இவரும் இடது கை வீரர் என்பது கூடுதல் சிறப்பம்சம்” எனக் கூறினார்.
இஷான் கிஷன் 2021ஆம் ஆண்டு, நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார். இதுவரை 10 ஒருநாள், 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.