
இந்தியாவின் பழங்குடி மாவட்டங்களில் நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களால் (NCDs) ஏற்படும் மரணங்கள் அதிகரிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் அதிக நுகர்வு, புகையிலை புகைத்தல் மற்றும் நகரமயமாக்கல் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் சுமார் 12 பழங்குடி மாவட்டங்களில் கடந்த 2015 – 2018 ஆண்டுகளுக்கு இடையில் 5,000-க்கும் மேற்பட்ட இறந்த பழங்குடியினரின் குடும்ப உறுப்பினர்களிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்திய ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 66% பேர் தொற்று அல்லாத நோய்களால் இறந்ததுள்ளதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
ICMR-n தேசிய நோய்த் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான பிரசாந்த் மாத்தூர் பேசுகையில், நகரமயமாக்கல், ரீஃபைன்ட் செய்யப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட்ஸ், எளிதான சாலை போக்குவரத்து மற்றும் நவீன வாழ்க்கை முறை போன்ற ஆபத்து காரணிகளால் பழங்குடி சமூகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தங்கள் பாரம்பரிய மற்றும் கலாச்சார வாழ்க்கை முறைகளை மெல்ல மெல்ல கைவிட்டு வருகின்றன.
இதன் தாக்கம் அவர்களின் வாழ்க்கையில் எதிரொலித்துள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் பேசிய பிரசாந்த் மாத்தூர் தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் முக்கியமாக நமது நவீன வாழ்க்கை முறைகளால் தூண்டப்படுகின்றன. இதனால் 12 பழங்குடி மாவட்டங்கள் தொற்றா நோய்களால் அதிக பாதிப்புகள் மற்றும் இறப்புகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மேம்படுத்தும் முயற்சிகள் இல்லாத காரணத்தால் எதிர்காலத்தில் பழங்குடியின மக்களிடையே தொற்றா நோய்கள் இன்னும் கூடும் என்று மாத்தூர் எச்சரித்துள்ளார். முன்பு மலேரியா, காசநோய், வயிற்றுப்போக்கு போன்ற பல வகை தொற்றுகளால் மக்கள் இறந்த நிலையில் தற்போது தொற்றா ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பழங்குடியின மக்களும் NCD-க்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை உணர்ந்து அவர்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது நிலைமையை மேம்படுத்த உதவும். வாழ்க்கை முறையை பேணுவதை உள்ளடக்கிய பழங்குடியினரின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை பேண நாம் எவ்வாறு உதவ முடியும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ புற்றுநோயியல் துறையின் முன்னாள் தலைவர் லலித் குமார் கூறினார், பழங்குடியின பகுதிகள் உட்பட இந்தியாவின் கிராமப்புறங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் நகர்ப்புறங்களை போலவே பேராசிரியர் வருகின்றன. எனவே தான் தற்போது நகரங்களை போலவே தொற்றா நோய்கள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன.
எல்லா மட்டத்திலும் ஜங்க் ஃபுட், புகை மற்றும் மது பழக்கம் அதிகரித்துள்ளது. பொதுவாக பழங்குடியின மக்கள் நாட்டு மதுவை உட்கொண்டாலும், பொதுவாக இறப்புக்கான மற்ற காரணங்களில் 3-ல் ஒரு பங்கு புகைபிடிப்புடன் தொடர்புடையது, மற்றொரு 3-ல் ஒரு பங்கு ஜங்க் ஃபுட்ஸ் உட்பட டயட்டுடன் தொடர்புடையது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது நாட்டிலேயே வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிகமாக இருப்பதாக கூறினார்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 12 பழங்குடியின மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பாதிப்புகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரித்தார். எனவே தொற்றாத நோய் பாதிப்புகளில் இருந்து பழங்குடி மக்களை பாதுகாக்க சிறந்த ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் தீவிர கவனம் தேவை என்றார்.
இந்த ஆய்வு உணர்த்தும் செய்தி பழங்குடியினரின் பாரம்பரியத்தை மீட்டெடுத்து பராமரிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையே பொது சுகாதார நிபுணர் சந்திரகாந்த் லஹரியா பேசுகையில், நாடு முழுவதும் தொற்றா நோய்கள் அதிகரிக்க அதிக அளவிலான உட்கார்ந்த வாழ்க்கை முறை, அதிகரித்த நொறுக்கு தீனி நுகர்வு, செயலற்ற வாழ்க்கை முறை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளன.
2 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினரின் ஆரோக்கியம் குறித்த நிபுணர் குழுவால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை சுட்டிக்காட்டிய லஹரியா, அந்த மக்களுக்கான நிலையான மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு முறையை விரைவில் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.