
டாஸ் வென்றுப் பிறகு, எதை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என ரோஹித் ஷர்மாவிடம் கேட்டபோது, ’பௌலி…பேட்டி…நோ..பௌலிங்’ என குழப்பத்தில் பேசினார். அதன்பிறகு இதுகுறித்து டாஸ் ஒருங்கிணைப்பாளர் ரவி சாஸ்திரியிடம் பேசிய ரோஹித் ஷர்மா, ”டாஸ் வென்றால் எதை தேர்வு செய்வது என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து பேசவே இல்லை. அதனால்தான், இந்த தடுமாற்றம். கடந்த போட்டியில் பேட்டிங் தேர்வு செய்தோம். இப்போது பந்துவீச்சை தேர்வு செய்கிறோம்” எனக் கூறினார்.
பிட்ச் ரிப்போர்ட்:
ராய்பூர் பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும். பௌலிங் பிட்சில் புட்கள் இருப்பதால், முதலில் பந்துவீசும் அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால், டாஸ் மிகமுக்கியமாக இருக்கும், ஸ்பின்னர்களால் ஓரளவுக்குத்தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ராய்பூர் மைதானம்:
ராய்பூர் மைதானத்தில் இதற்குமுன், சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை. முதல்முறையாக இன்று நடக்கிறது. இந்தியாவில், இது 50ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக உள்ளது.
இந்திய அணி:ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, வாஷிண்டன் சுந்தர், ஷர்தூல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணி: பின் ஆலன், டிவோன் கான்வே, ஹென்ட்ரி நிகோலஸ், டேரில் மிட்செல், டாம் லதாம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, பிளேயர் டிக்னர், லாக்கி பெர்குஷன்.