
போட்டிக்கனா டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு சஹல், உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிட்ச் ரிப்போர்ட்:
இந்தூர் பிட்சில், கீப்பருக்கு பின்னால் 54 மீட்டர் பவுண்டரிதான் இருக்கிறது. மேலும், மற்ற பவுண்டரிகளும் 60-61 மீட்டர்கள்தான் இருக்கும். எனவே, இங்கு பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியும். குறிப்பாக, சேசிங்கிற்கு ஏற்ற மைதானம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில், அதேபோல் நடந்தது.
ஓபனர்கள் அசத்தல்:
இந்திய அணி ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். பவுண்டரியும் சிறியது என்பதால், அசால்டாக பவுண்டரி, சிக்சர்களை அடித்து ரன்களை குவித்தார்கள். பிட்சில் ஸ்விங், சுழல் இல்லாமல் இருந்ததால், நியூசிலாந்து பௌலர்கள் விரக்தியுடனே பந்துவீசி வந்தார்கள்.
ஏற்கனவே, தொடரை இழந்த விரக்தி, தற்போது பிட்சும் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததால், உறுதியான மனநிலையில், நியூசிலாந்து பௌலர்கள் பந்துவீசவில்லை. குறிப்பாக, சரியான லைனில் பந்துவீசாமல் சொதப்பலாகவே பந்துவீசி வந்தார்கள். மேலும், ஓபனர்கள் ரோஹித் மற்றும் கில் இருவரும் முரட்டு பார்மில் இருந்த போதும், குவிய ஆரம்பித்தது.
இருவரும் சதம்:
இருவரின் அதிரடி காரணமாக இந்திய அணி 20 ஓவர்களிலேயே 178/0 ரன்களை குவித்து அசத்தியது. 25ஆவது ஓவரில் 200 ரன்களை தொட்டுவிட்டது. மேலும், ரோஹித் ஷர்மா 100 (83 பந்துகள், 9 பவுண்டரி, 6 சிக்ஸர்), சுப்மன் கில் 100 (72 பந்துகள், 12 பவுண்டரி, 4 சிக்ஸர்) இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர். இந்திய அணி இதே வேகத்தில் விளையாடினால், நிச்சயம் 500 ரன்களை அடிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
ரோஹித் வரலாற்று சாதனை:
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தோர் பட்டியலில், அப்ரீதி 351 (369 இன்னிங்ஸ்), கெயில் 331 (294 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். தற்போது ரோஹித் ஷர்மா 271* (234) மூன்றாவது இடத்தில் முன்னேறியுள்ளார்.