
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். துவக்கத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் இருந்ததால் ஓபனர்கள் நிதானமாக விளையாட ஆரம்பித்தார்கள்.
குறிப்பாக, ரோஹித் ஷர்மா பவுண்டரி, சிக்சர்களில்தான் ரன்களை சேர்த்து வந்தார். இந்நிலையில், ரோஹித் 34 (38) டிக்னர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி 8 (10), இஷான் கிஷன் 5 (14) ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
பார்ட்னர்ஷிப்:
இதனைத் தொடர்ந்து ஓபனர் சுப்மன் கில்லுடன் சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அப்போது, இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், சூர்யகுமார் யாதவும் 31 (26) பெரிய ஸ்கோர் அடிக்காமல், டேரில் மிட்செல் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். மறுபக்கம் கில் 88 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்கள் உட்பட 100 ரன்களை எடுத்து அசத்தினார்.
கில் இப்படி அதிரடி காட்டி வந்த நிலையில், மற்ற பேட்டர்கள் ஹார்திக் பாண்டியா 28 (38), வாஷிண்டன் சுந்தர் 12 (14), ஷர்தூல் தாகூர் 3 (3) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பினார்கள்.
ஆனால், கில்லுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை. இறுதியில், 49ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். மொத்தம் 145 பந்துகளில் 19 பவுண்டரி, 8 சிக்சர்கள் உட்பட 200 ரன்களை அடித்தார். இதனைத் தொடர்ந்து கடைசி ஓவரில் 208 (149) ரன்கள் எடுத்தபோது, சிப்லி பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 349/8 ரன்களை சேர்த்தது.
நியூசிலாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் பின் ஆலை 40 (39) ஆலனை தவிர கான்வே 10 (16), ஹென்ட்ரி நிகோலஸ் 18 (31), டேரில் மிட்செல் 9 (12) போன்ற முதல் வரிசை பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில் பிரெஸ்வெல் 78 பந்துகளில் 12 பவுண்டரி, 10 சிக்சர்கள் உட்பட 140 ரன்களை குவித்து அசத்தினார்.
தொடர்ந்து மிட்செல் சாண்ட்னரும் 57 (45) பெரிய ஸ்கோர் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவருக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷர்தூல் தாகூர் வீசிய அந்த ஓவரில் பிரேஸ்வெல் முதல் பந்த சிக்சர் அடித்த நிலையில், அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதுதான், அந்த அணியின் கடைசி விக்கெட்டாக இருந்ததால், நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337/10 ரன்கள் சேர்த்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜ், சொந்த மண்ணில் 4/46 விக்கெட்களை கைப்பற்றியதால்தான், இந்தியாவில் வெற்றியைப் பெற முடிந்தது.