
ராயல் என்பீல்டு நிறுவனம், சூப்பர் மெட்டியோர் 650 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது, ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என்ற 2 வேரியண்ட்களில் வருகிறது. ஸ்டாண்டர்டு வேரியண்ட் 5 வண்ணங்களிலும், டூரர் கூடுதலாக இரண்டு வண்ணங்களிலும் கிடைக்கும். இரண்டிலுமே 648 சிசி பேரல் டிவின் ஏர் கூல்டு மோட்டார், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இது அதிகபட்சமாக 46.2 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.3.48 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவாசாக்கி உல்கான் எஸ் மற்றும் பென்னலி 502சி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.