
கடும் வீழ்ச்சி
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதன் வரவு செலவு மோசடி, வரி வசூல், மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை என பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தது. இதற்கிடையில் தான் கடந்த ஜனவரி 25 அன்று அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டன.

ஆதாரமற்ற தகவல்கள்
அதானி குழுமமோ இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறான தகவல். இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் வந்த அறிக்கை. எங்களின் வீழ்ச்சி ஹிண்டர்ன்பர்க் பலனடைய பார்க்கின்றது. முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குறைக்கிறது என பரபரப்பானதொரு கருத்தினையும் முன் வைத்தது.

ஹிண்டர்ன்பர்க்கிற்கு எச்சரிக்கை
அதானி நிறுவனங்களின் சரிவில் பலனை அடையவே ஹிண்டர்ன்பர்க், இப்படி செய்யப்பட்டுள்ளது என்றும் அதானி தரப்பில் கூறப்பட்டது. மேலும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நிலைபாட்டில் மாற்றம் இல்லை
எனினும் இதற்கெல்லாம் நாங்கள் அசர மாட்டோம் எனும் வகையில் ஹிண்டன்பர்க் நிறுவனம், தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தாங்கள் செய்த ஆழமான ஆய்வுக்கு பிறகே இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்கவும்
எனினும் அதானி குழுமமோ போதிய சரியான தகவல்களை வைத்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வு செய்யவில்லை. எங்களிடம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இது தவறானதொரு தகவல் என்றும் கூறியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்திடம் நாங்கள் உங்களிடம் பல கேள்விகளை எழுப்பினோம். ஆனால் நீங்கள் எதற்குமே பதில் கூறவில்லை. ஆக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது நாளாக சரிவில் அதானி பங்குகள்
மொத்தத்தில் இரண்டாவது நாளான இன்றும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. இதற்கிடையில் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு 2.37 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக அதானி டொட்டல் டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 76,000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 63,700 கோடி ரூபாய் மதிப்பை இழந்துள்ளது.

இவ்வளவு சரிவா?
அதானி குழுமத்தின் இந்த இரு பங்குகளும் இன்று 15% கடுமையான சரிவினைக் கண்டுள்ளது. இதே 10 அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையானது, கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல், 12% சரிவினைக் கண்டு, 16.83 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது. இது முன்னதாக 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

பங்குகள் பலத்த சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 13.41% சரிவினைக் கண்டு, 2175 ரூபாயாக வர்த்தகமாகியது. இதே அதானி டொட்டல் கேஸ் பங்கின் விலையானது 14.88% குறைந்தது, 3118.60 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடானது இன்று வெளியாகியது. இதற்கிடையில் இதன் பங்கு விலையானது 2.38% சரிவினைக் கண்டு, 3309.15 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.

லோவர் சர்க்யூட் ஆன பங்குகள்
இதே அதானி வில்மர் பங்கின் விலையானது இன்று 5% சரிவினைக் கண்டு, லோவர் சர்க்யூட் ஆகி 517.30 ரூபாயாகவும் காணப்பட்டது. இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 3.20% சரிவினைக் கண்டு 690.05 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி கீரின் நிறுவனத்தின் பங்கு விலையானது, 9.55% சரிவினைக் கண்டு, 1678.50 ரூபாயாகவும், அதானி குழுமத்தின் சிமெண்ட் பங்குகளான ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விலையானது 5 – 5.5% வரை சரிவைக் கண்டது, இதே என் டி டி வி பங்கின் விலையானது லோவர் சர்க்யூட் 56% குறைந்தது, 250 ரூபாய் லெவலில் காணப்பட்டது.

இவ்வளவு இழப்பா?
அதானி கீரின் நிறுவனம் 35,562 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பினை கடந்த இரண்டு அமர்வுகளில் கண்டுள்ளது. இதே அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ஒவ்வொன்றும் 14,000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி பவர் நிறுவனங்கள் 10,000 கோடி ரூபாய் மதிப்பை இழந்துள்ளன. இதே அதானி வில்மர் நிறுவனம் மற்றும் ஏசிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7200 கோடி ரூபாய் சரிவினையும் கண்டுள்ளது.

செபியின் முடிவு?
அதானி குழுமம், ஹிண்டர்ன்பர்க் இடையேயான இந்த பிரச்சனை, தற்போது செபியும் துருவ ஆரம்பித்துள்ளது. மேலும் அதானி குழுமத்தின் அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இது மேலும் பிரச்சனைகளை பூதாகரமாக்கியுள்ளது எனலாம். மொத்தத்தில் அதானி குழுமத்திற்கு இது போறாத காலமே.