
Palani Kumbabishekam: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் – ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு
ராமாயணத்தில் வனவாச காலத்தில் ஸ்ரீ ராமனும், சீதையும் சில காலம் இந்த மலையில் வந்து தங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. சுட்டிபாரா மகாதேவா கோவில் அருகே அமைந்துள்ள இந்த மலையில், மகாதேவா கோவில் நிர்வாகத்தினரால் மலை உச்சியில் ஐயப்பன் சிலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அமைய உள்ள ஐயப்பன் சிலை பற்றி மகாதேவா கோவில் நிர்வாகி கூறினார், 34 கி.மீ., தொலைவில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும் படி ஐயப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பந்தளத்தில் இருந்து பார்த்தாலும் இந்த சிலை தெரியும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐயப்பன் யோக நித்ர ரூபத்தில் இருக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. ரூ.25 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.
Thai Amavasai : தை அமாவாசை எப்போது? தர்ப்பணம் கொடுக்கும் நேரம், செய்ய வேண்டிய விஷயங்கள்
திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆழிமலா கடற்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி தேவதத்தன் தான் இந்த சிலையையும் வடிவமைக்கிறார். 66 மீட்டர் சுற்றளவில் அமைக்கப்பட உள்ள இந்த சிலை நான்கரை வருடங்களில் தயாராகி விடும். சபரிமலை ஐயப்பனின் பிறப்பு துவங்கி, வாழ்க்கை வரலாற்றின் விளக்கம் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட உள்ளது. கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய பறவை சிற்பமான ஜடாயு இயற்கை பூங்காவில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையின் உள்ளேயே இந்த அருங்காட்சியகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை துவக்கம்
பந்தளம் அரண்மனை, பூங்காவனம், பம்பா, அழுத நதிகள், ஐயப்பனின் நண்பர் வாபர் உள்ளிட்ட பல மாதிரி வடிவங்கள் இங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பக்தர்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிலை அமைப்பதற்கான முன் வடிவம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மிகப் பெரிய ஐயப்பன் சிலையை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.