
சபரிமலை ஐயப்பன் கோவில்
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டிற்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனில் வருமானமாக ரூ.320 கோடி கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் இத்தனை கோடி வருமானம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
மாத மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17 ஆம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கொட்டும் பழை, பனி என்றும் பார்க்காமல் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் வரை தரிசனம் செய்து வந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் – 108 திவ்ய தேசம் 42 வது கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம்

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி, உடனடி முன்பதிவு மூலமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்ததால் தரிசன நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட பல மாற்றங்களை தேவசம் போர்டு செய்து வந்தது. நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 28 ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை காலத்திற்காக நடை திறக்கப்பட்டது.
சபரிமலை கோவில் வருமானம் :
டிசம்பர் 28 ஆம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டு, பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதி மகரசங்கராந்தி பூஜை, மகரவிளக்கு பூஜையை தொடர்ந்து மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. அதற்கு பிறகும் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 19 ஆம் தேதி இன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டு சீசனில் ரூ.320 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தை அமாவாசை விரதம், தர்ப்பணம் பற்றிய உங்கள் கேள்விகளும் எங்களின் பதில்களும்
தொடரும் சில்லறை எண்ணும் பணி

இது பற்றி திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் கூறினார், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை மட்டுமல்ல வருமானமும் அதிகம். உண்டியலில் போடப்பட்ட சில்லறைகளை இன்னும் நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனால் மொத்தமாக எவ்வளவு தொகை வருமானம் என்பது தெளிவான விபரம் இரண்டு நாட்களில் தெரியும். மகரசங்கராந்தி தினமான ஜனவரி 14 ஆம் தேதி மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்தும் சுமூகமாக நடைபெற எங்கள் ஒத்துழைப்பு வழங்கிய கேரள அரசின் பல்வேறு துறைகளுக்கும், பக்தர்களுக்கும் எங்களின் நன்றி என தெரிவித்துள்ளார்.