
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள எண்ணற்ற பணியிடங்களுக்குத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ, பொறியியல் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற பணி கொடுக்கப்படும். இப்பணியிடங்களுக்கு பணிக்கு ஏற்ற மாதம் ரூ.20,000 முதல் தொடங்கி ரூ.2.5 லட்சம் வரை சம்பளத்தில் வழங்கப்படவுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு அரசு நிறுவனத்தில் வேலையில் சேரலாம்.
தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்காக மாவட்ட திட்ட மேலாளர் என்ற பதவிக்கு இந்த அறிவிப்பின் மூலம் ஆட்கள் சேர்க்கப்படவுள்ளனர். பணியிடங்களின் எண்ணிக்கை குறிக்கப்படாத நிலையில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
VP – Career Portal | 1 | ரூ.1.5 – 2.5 லட்சம் |
AVP – Industry Engagement (MEAC) | 1 | ரூ.1-1.5 லட்சம் |
AVP – HR & Training | 1 | ரூ.1-1.5 லட்சம் |
Senior Associates (Service Industry) | 1 | ரூ.50,000-80,000 |
Senior Associates (MEAC) | 1 | ரூ.50,000-80,000 |
Senior Software Associates / IT Coordinator | 2 | ரூ.50,000-80,000 |
Senior Associates – Media | 1 | ரூ.50,000-80,000 |
Project Manager (Competitive Exam) | 1 | ரூ.80,000-1,00,000 |
Program Manager District | அதிகப்பணியிடங்கள் | ரூ.80,000-1,00,000 |
Project Associate | 6 | ரூ.60,000-80,000 |
MIS Analysts – District | அதிகப்பணியிடங்கள் | ரூ.20,000 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
VP – Career Portal | B Tech/BE/MCA/MSc (Computer Science / IT).10 வருட அனுபவம் |
AVP – Industry Engagement (MEAC) | MBA/ B Tech / BE. 5-க்கு மேற்பட்ட வருட அனுபவம் |
AVP – HR & Training | MBA (HR). 5-க்கு மேற்பட்ட வருட அனுபவம் |
Senior Associates (Service Industry) | MBA / BBA/B Tech / BE. 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம் |
Senior Associates (MEAC) | MBA / BBA/B Tech / BE. 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம் |
Senior Software Associates / IT Coordinator | B Tech / BE / MCA / M.Sc. 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம் |
Senior Associates – Media | Visual Communication, Journalism, Media, Marketing போன்றவற்றில் இளங்கலைப் பட்டம். 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம் |
Project Manager (Competitive Exam) | MBA/ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம். 3-4 வருட அனுபவம் |
Program Manager District | MBA/MSW/Developmental studies அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம். 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம் |
Project Associate | MBA/MSW/ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம். 2 வருட அனுபவம் |
MIS Analysts – District | IT/ Computer Science பிரிவில் முழுநேர டிகிரி. 1 வருட அனுபவம் |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tnskill.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://mis.sids.co.in/tnsdc2/candidate_info.php
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.