
மதுரை மாநகராட்சியின் பொதுச் சுகாதாரம் கீழ் செயல்படும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் தகுதிக்கு ஏற்ற நிரப்பப்படவுள்ளது. ரூ.8,500 முதல் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Urban Health Manager/Sector Health Nurse (SHN) | 2 | ரூ.25,000 |
Pharmacist | 9 | ரூ.15,000 |
Laboratory Technician | 12 | ரூ.13,000 |
Multi Purpose Health Worker | 8 | ரூ.8,500 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Urban Health Manager/Sector Health Nurse (SHN) | செவிலியர் பாடத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் |
Pharmacist | பார்மசி பாடத்தில் டிப்ளமோ/இளங்கலைப் பட்டம் / முதுகலைப் பட்டம் |
Laboratory Technician | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.MedicalLab Technology Course சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
Multi Purpose Health Worker | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.maduraicorporation.co.in/
Also Read : தாம்பரத்தில் இந்திய விமானப் படை பணிக்கு தேர்வு முகாம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாநகர் நல அலுவலர்,
3வது மாடி, பொதுச் சுகாதாரப் பிரிவு,
அறிஞர் அண்ணா மாளிகை,
மதுரை மாநகராட்சி,
தல்லாகுளம்,
மதுரை – 625 002.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.