
ஜபல்பூரில் உள்ள ராணுவத்தின் JAK RIF REGIMENTAL CENTRE-இல் குரூப் சி பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 18,000 ஆயிரம் முதல் 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க முழுமையான விவரங்கள் இதோ..
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Cook | 1 | ரூ.19,900-63,200 |
Barber | 1 | ரூ.180,00-56,900 |
Tailor | 2 | ரூ.18,000-56,900 |
Draughtsman | 1 | ரூ.25,500 |
Messenger | 3 | ரூ.18,000-56,900 |
Daftry | 3 | ரூ.18,000-56,900 |
Safaiwala | 1 | ரூ.18,000-56,900 |
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது சலுகைகளும் உண்டு.
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Cook | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Barber | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Tailor | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 வருட அனுபவம் |
Draughtsman | பொறியியலில் டிப்ளமோ மற்றும் 1 வருட அனுபவம் |
Messenger | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Daftry | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Safaiwala | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மேலும் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
SELECTION BOARD GP ‘C’ POST,
JAK RIF REGIMENTAL CENTRE, JABALPUR CANTT PIN 482001.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.02.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.