
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இருமொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார் சமந்தா.
ஷர்வானந்த்: நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்ட ‘எங்கேயும் எப்போதும்’ நடிகர்… பொண்ணு யார் தெரியுமா?
அரிய நோய் பாதிப்பு

இந்நிலையில் கடந்த சில மாதங்களில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு நாளும் படுக்கையில் இருந்து எழுவதே பெரும் போராட்டமாக உள்ளதாகவும் பொறுக்க முடியாத அளவுக்கு உடலில் வலி இருப்பதாகவும் தெரிவித்தார். நடிகை சமந்தா இப்படி ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Mano Bala: நடிகர் மனோ பாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை… இப்போது எப்படி இருக்கிறார்?
வெளிநாட்டில் சிகிச்சை

சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர். மேலும் விரைவில் மீண்டும் வர வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் யசோதா படத்தில் நடித்த நடிகை சமந்தா. இந்நிலையில் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஹைத்ராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில்தான் நாடு திரும்பினார்.
திருமணம் ஆன நடிகரை மேடையிலேயே இழுத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகை!
நம்பிக்கையுடன் சமந்தா

ஏர்போர்ட்டில் சமந்தா நடந்து வரும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அவரது முகத்தில் மகிழ்ச்சியே இல்லை, பழைய சமந்தா இல்லை என வேதனை அடைந்தனர். தொடர்ந்து சகுந்தலம் படத்தின் பிரமோஷன் விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா, எமோஷனலாக பேசி கண்ணீர் விட்டார். தனது அழகு போய் விட்டதாக கூறும் நெட்டிசன்களுக்கும் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா, தன்னம்பிக்கையுடன் மீண்டும் வருவேன் என்றார்.
Bayilvan Ranganathan: விஜய் மீது அவதூறு பரப்புவது ஏன்? யார்? பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு தகவல்!