
1/27/2023 4:34:03 PM
தமிழில் 211 படங்களுக்கு மேல் நடித்துள்ள சம்பத் ராம், தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். திரையுலகில் 25வது ஆண்டை நிறைவு செய்துள்ள அவர், ‘மலையாளத்தில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வெளியான ‘மாளிகப்புரம்’ படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கில் ‘சலார்’, ‘நேனே நான்’, மலையாளத்தில் ‘காசர கோல்ட்’, ‘சாலமன்’, ‘தங்கமணி’, தமிழில் ‘விடுதலை’, ‘தங்கலான்’, ‘கட்டில்’, ‘கங்கணம்’, ‘சூர்ப்பனகை’, ஆங்கிலத்தில் ‘தி கிரேட் எஸ்கேப்’ ‘, ‘தி பேர்ல் பிளட்’ மற்றும் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வீரப்பன் வெப்தொடரில் நடிக்கிறேன். உன்னி முகுந்தனுடன் நடித்த ‘மாளிகப்புரம்’ மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த ‘வால்டேர் வீரய்யா’ ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றி, தற்போது எனக்கு பல்வேறு மொழிகளில் புதுப்பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என்றார்.