
அமாவாசை மற்றும் பெளர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லபட்ச சதுர்த்தி என்றும், பெளர்ணமிக்குப் பிறகு வருவது கிருஷ்ணபட்ச சதுர்த்தி என்றும். பெளர்ணமிக்கு பிறகு வரும் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். வாழ்வில் அத்தனை வித கஷ்டங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடியது சக்தி இந்த நாளுக்கு உண்டு. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எப்படி பிரச்சனையாக இருந்தாலும் அது நீங்கிவிடும் அல்லது பிரச்சனை தீர்வதற்கான வழி பிறக்கும் என்பதன் ஐதீகம்.