
சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே வெளியான தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிப்பதாக நேற்று அறிவித்தது.
இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணியின் பிரபலமான காமெடி வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார். தீபக் ஒளிப்பதிவில் சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் படக்குழுவினர்.
இந்த நிலையில் சந்தானம் நடித்த ‘கிக்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் உள்ளே & என #வடக்குப்பட்டி ராமசாமி 🔥
மூலம் ஒரு படம்@karthikyogitw
உற்பத்தி@மக்கள் மீடியாஃபிசி pic.twitter.com/yQHNwckJUr
— சந்தானம் (@iamsanthanam) ஜனவரி 23, 2023