
தமிழ் திரை உலகின் மாஸ் நடிகரான விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரை உலகின் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர் என்பதும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறோம்.
அந்த வகையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘ஓ பேபி’, ‘கார்த்திகேயா 2’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தற்போது சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ போகிறோம்!!!
தெலுங்கில் ஓ பேபி, கூடாச்சாரி, கார்த்திகேயா2 மற்றும் மிக சமீபத்தில் வெளியான தமாகா ஆகிய படங்கள் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பிறகு
தமிழில் அடுத்ததாக
நாங்கள் கைகோர்க்கிறோம் @iamsanthanam க்கான #SantasBiggie ✨💖 💥அடுத்த புதுப்பிப்புக்காக காத்திருங்கள். நாளை 1️⃣1️⃣ AM ⏳️⏳️ pic.twitter.com/XNprKQflsv
— பீப்பிள் மீடியா ஃபேக்டரி (@peoplemediafcy) ஜனவரி 22, 2023