
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 17 ஜனவரி, 2023 11:57 PM
வெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2023 11:57 PM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 17 ஜனவரி 2023 11:57 PM

புதுடெல்லி: நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை. இருந்த போது நடப்பு ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
மும்பை அணிக்காக அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை தொடருக்கான போட்டியில் 155 பந்துகளில் 125 ரன்கள் குவித்துள்ளார். தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருந்த போதும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளுக்கான 17 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அது குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் அவர் நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதம் பதிவு செய்துள்ளார். இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் தனது தரமான ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். இதனை ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். அதில் சில பதிவுகள் இந்திய ஆடவர் அணியின் தேர்வுக் குழுவை விமர்சிக்கும் வகையில் உள்ளது.
தவறவிடாதீர்!