
ஜோதிடம்
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான். ஆனால் சனி கிரகத்தைப் பார்த்து பயப்பட தேவையில்லை. நல்லது நினைத்து நல்லது செய்பவர்களுக்கு சனி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.அரசியலில் புகழ் பெற்று திகழவேண்டும் என்றால் அவருக்கு சனி நல்ல உதவி செய்வார். அதே நேரம் சனி நோய்கள், விபத்திற்கும் காரகர். சனி சரியில்லாமல் இருந்தால் உறவில் கூட விரிசல் ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். சனி பிறவி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். நிறைய சோதனைகள் வந்து அவர்களை சாதனைகள் புரிய வைப்பார். ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று பலரும் பேசுவார்கள். சிலருக்கு சனி தசை, சனி புத்தி காலத்திலும் பாதிப்பு ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் சனி 3,6,10,11 போன்ற வீடுகளில் அமைவது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை சனிபகவான் எந்த லக்னத்திற்கு நன்மை செய்வார், பாதிப்பை தருவார் என்று பார்க்கலாம்.

நவகிரகங்களில் சனி பகவான் நமது உடலில் தொடையில் வசிப்பதாக ஐதீகம். ஒருவருக்கு சனி தசை 19 வருடம் நடக்கும். சனி தசை காலத்தில் மிக வேகமான வளர்ச்சி நடக்கும், அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்களும் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னகாரர்களுக்கும் சனிபகவான் தனது தசாபுத்தி அடிப்படையில் நன்மைகளையும் யோகங்களையும் கொடுப்பார். சனி தசை சனி புத்தி காலத்தில் பலன்கள் யாருக்கு பாதிப்புகள் யாருக்கு பரிகாரம் என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். அப்போது ஜோதிடர்கள் பலன் சொல்லும் போது உங்க தசாபுத்தி நல்லதாக இருந்தால் நல்ல பலன்களே நடக்கும் என்று சொல்வார்கள். அந்த தசாபுத்தி என்பது நவகிரகங்கள் சில ஆண்டுகள் தங்களின் பிடியில் வைத்திருக்கும். கேது முதல் புதன் வரை மொத்தம் ஒன்பது தசா காலங்கள் உள்ளன. ஒன்பது தசாகாலத்திலும் சுய புத்தி தொடங்கி வரிசையாக ஒன்பது புத்திகள் நடைபெறும். அப்போது நன்மையோ, தீமையோ அவர்களின் கர்மா பலன்களுக்கு ஏற்ப நடைபெறும். சனி தசை சனி புத்தி காலத்தில் பலன்கள் யாருக்கு பாதிப்புகள் யாருக்கு பரிகாரம் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் சனி பகவான் நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம். ஒருவருக்கு சனி தசை 19 வருடம் நடக்கும். சனி தசை காலத்தில் மிக வேகமான வளர்ச்சி நடக்கும், அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்களும் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்/ராசிகர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். மேஷம் விருச்சிகம், லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார் கடகம், சிம்மம்,தனுசு, மீனம் லக்னங்களுக்கு சனி சுமாரான பலன்களையே சனி திசை கொடுக்கும்.

சனி போல பணத்தை அள்ளிக்கொடுப்பவர் யாரும் இல்லை. சனி திசை காலத்தில் தொழில் தொடங்குவார்கள். சனி எங்கிருந்தால் அதிர்ஷ்டம் என்று பார்த்தால். துலாமில் சனி உச்சமடைபவர். சனி உச்சம் பெற்றவர், சனி பார்வை துலாம் ராசியில் விழுந்தால் அவர்கள் நீதி துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னகாரர்களுக்கும் சனிபகவான் தனது தசாபுத்தி அடிப்படையில் நன்மைகளையும் யோகங்களையும் கொடுப்பார்.
நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் எல்லாம் சிறப்பானதாக அமையும். அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகள் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகள் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும்.
மேஷ ராசியில் சனி பகவான் நீசமடைகிறார். கூடவே இது செவ்வாயின் வீடு என்பதால் சனி இந்த ராசியில் அமர்ந்திருந்தால் இயற்கைக்கு எதிரான வேலைகளை செய்வார்களாம். நேர்மையற்றவர்களாக இருப்பார்களாம். விருச்சிகத்தில் சனி அமர்வதற்கு நல்ல இடம் அல்ல செவ்வாய் சனிக்கு எதிரி. பகையாளி வீட்டில் சனி அமர்வது நல்லதல்ல. அவசரக்காரர்கள். படபடப்பானவர்கள். சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் ஏற்படும்.
ரிஷபம், துலாம் சுக்கிரன் வீடு. ரிஷபத்தில் சனியிருக்க நன்மைகள் அதிகம்தான். சிலருக்கு அதிகாரம் கிடைக்கும். தந்திரமாக செயல்படுபவர். துலாம் சனி பகவானின் உச்ச வீடு. பிறந்த ஜாதகத்தில் சனி பகவான் துலாம் ராசியில் இருப்பது நன்மையைத் தரும். ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். சாமர்த்தியசாலி எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன்.
மிதுனம் கன்னி புதன் வீடு, மிதுனத்தில் சனி பகவான் அமர்ந்திருந்தால் படபடப்பானவர்கள். இயந்திரங்கள் இரசாயன துறையில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். கன்னியில் சனி அமையப்பெற்றவர்கள் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள். குறுகிய மனப்பான்மை மிக்கவர்கள். அடிக்கடி உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும்.
கடகம் சந்திரன் வீட்டில் சனி இருந்தால் சுயநலமானவர்களாவும், பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிலரது வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். சிம்மத்தில் சனி இருந்தால் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். முரண்பாடு கொண்டவர்கள்.
மகரம், கும்பம் ராசிகள் சனியின் சொந்த வீடு ஜாதகத்தில் இந்த ராசிகளில் சனி இருக்கப் பெற்றவர்கள் படிப்பாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். கும்பம் ராசியில் சனி அமரப்பெற்றவர்கள். மகிழ்ச்சியானவர்கள். குருவின் வீடான தனுசு ராசியில் சனி அமர ஜாதகர் பெருந்தன்மையுடன் இருப்பார். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மீனம் ராசியில் சனி அமர பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவராக இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் பலமிழந்திருந்து திசை நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், எலும்பு தொடர்புடைய நோய்கள் உண்டாகும். அதிலும் சூரியனின் வீட்டிலோ, சாரத்திலோ சனி அமைந்தால் தாய் தந்தையருக்கு பாதிப்பு, கல்வியில் தடை, தகுதிக்கு குறைவான வேலைகள் செய்யும் அமைப்பு, வேலையாட்களால் பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை உண்டாகும். நிறைய கடன் வேண்டிய சூழ்நிலையும் அதை அடைக்க முடியாமல் அவப்பெயரும் உண்டாகும். மற்றவரால் வெறுக்க கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையும் மந்தமடையும்.
சனி பகவான் நியாயவான். அவருக்கு மேஷம் நீச வீடு துலாம் உச்ச வீடு. மகரம் கும்பம் ஆட்சி வீடுகள். சனி தசை காலத்தில் சனி தசை சூரிய புத்தி, சனி தசை சந்திர புத்தி சுமரான பலன்களை கொடுப்பார் பரிகாரம் செய்ய வேண்டும். சனி தசை ராகு புத்தி, சனி தசை கேது புத்தி செய்தால் போதும் பரிகாரம் பண்ணலாம். சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். இதே போல சனி புத்தி நடக்கும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும்.
சனி பெயர்ச்சியால் பாதிப்பு, சனி தசை, புத்தியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட சனி சாந்தி ஹோமம் செய்யலாம். தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம். சனிதிசை காலத்தில் இரும்பு தானம் செய்யலாம். நல்ல தர்ம சிந்தனையோடு இருங்கள் சனிபகவான் உங்களுக்கு நல்லது கொடுப்பார். புண்ணியம் பண்ணுங்க சனிபகவான் நிறைய வாரி கொடுப்பார். நியாயவாதிகளாக நடந்துகொள்பவர்களுக்கு சனி நல்லதே செய்வார். யார் ஒருவர் நிறைய தானம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிறைய நல்லது கொடுக்கும்.
சனிக்கிழமைகளில் சனிஹோரை காலத்தில் எல்லா தீபம் ஏற்றலாம். அல்லது சனிக்கிழமைகளில் ஊனமுற்றவர்கள் அல்லது மனநலம் குன்றியவர்களுக்கு உதவலாம். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்கலாம். எதை எடுத்தாலும் தாமதமாகும். கோபப்படக் கூடாது. தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லலாம். பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றோர் செய்யும் உதவியும், தொண்டும் சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.
திருக்கொள்ளிக்காடு பொங்குசனி பகவான், ஏழரை சனி பகவானை வணங்கலாம். அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் குச்சனூர் சென்று சனிபகவானை வணங்கலாம். திருநள்ளாறு சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார். அவரை வழிபட சனி தசை சனி புத்தி நடப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். வஸ்திர தானம், இரும்பு தானம் செய்யுங்க. நோய், கடன் எதிரிகள் தொல்லை நீங்கும். அமாவாசை தர்ப்பணம் செய்பவர்கள் தண்ணீர் வைத்து வணங்க வேண்டும். மூத்தோர் கடன் செய்பவர்களுக்கு சனி பகவான் பாதிக்கமாட்டார்.
ஆங்கில சுருக்கம்
Sani Peyarchi palan 2023: அரசியலில் புகழ் பெற வேண்டுமானால் சனி அவருக்கு உதவுவார். அதே சமயம் நோய்களுக்கும், விபத்துகளுக்கும் அதிபதி சனி. சனி உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உறவில் கூட விரிசல் ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். பிறந்த ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். பல சோதனைகள் வந்து சாதனைகளை உணர்த்தும்.சனி பகவான் இந்து ஜோதிடத்தில் மிகவும் பயங்கரமான கிரகம். 7வது வீட்டில் சனி மிகவும் சக்தி வாய்ந்த இடம். குறிப்பாக ரிஷபம், மித்னம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் கிரகம்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: செவ்வாய், ஜனவரி 17, 2023, 16:12 [IST]