
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் இணைந்து வரும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் இந்த படத்தில் மலேசிய நடிகர் டிஎஸ்ஜி இணைந்தார் என்பதும் அதுமட்டுமின்றி பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்தார் என்றும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தற்போது வந்துள்ள தகவல்படி பிரபல செல்வராகவன் இணைந்துள்ளதாக தெரிகிறது.
விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் ‘சாணிக்கிடம்’ உள்ளிட்ட சில படங்களில் செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ள செல்வராகவன், தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் மட்டுமின்றி நடிகை அபிநயாவும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ளதாக சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த படத்தில் ஏற்கனவே விஷால், ரிதுவர்மா, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை வினோத்குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை #அபிநயா உலகத்திலிருந்து வேதாவாக #மார்க் ஆண்டனி #மார்க் ஆண்டனி உலகத்திலிருந்து
ஏ @gvprakash மியூசிக்கல்! 🎼@VishalKOfficial @vinod_offl @அதிக்ரவி @mee_sunil @riturv @iam_SJSuryah pic.twitter.com/PqfoqrciiA
— விஷால் பிலிம் பேக்டரி (@VffVishal) ஜனவரி 23, 2023