
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 320 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயர்வடைந்து 60,914 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 91 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயர்வடைந்து 18,118 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:27 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 229.46 புள்ளிகள் உயர்ந்து 60,851.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.80 புள்ளிகள் உயர்வடைந்து 18,118.45 ஆக இருந்தது