
சர்ச்சைகளுக்கு நடுவே நேற்று வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள பாலிவுட் திரையுலகை சரிவிலிருந்து பதான் மீட்கப்படும் என திரைப்பட வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பல் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள பதான் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. காவி உடையணிந்து தீபிகா படுகோன் ஒரு பாடலுக்கு நடனமாடியதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பதான் திரைப்படம் வெளியான ஒரே நாளில் இந்தியாவில் 57 கோடி ரூபாய் வசூல் குவிந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உலகளவில் இப்படம் 100 கோடியை வசூலித்துள்ளது.
இதன்மூலம், முதல் நாளில் இந்தியில் 52 கோடி ரூபாய் வசூலித்த கேஜிஎஃப் 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 300 திரையரங்குகளில் பதான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: