
செய்தி
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: சனிபகவானின் அருள் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். மரணத்திற்கு சமமான கண்டங்கள் இருந்தாலும் அது நீங்கும். எனவேதான் சனி பெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கின்றனர். சனி பெயர்ச்சி காலத்தில் எத்தனையோ பேர் வேலைக்காக சனிபகவானை சரணடைகின்றனர். இந்த சனி பெயர்ச்சியால் யாருக்கு புது வேலை கிடைக்கும். யாருடைய வேலையில் மாற்றம் ஏற்படும் என்று பார்க்கலாம்.
திடீர் வேலை இழப்பு என்பது பலருக்கும் அதிர்ச்சியை தரக்கூடியது. இன்றைய கை நிறைய சம்பளத்தில் வேலையில் இருந்தவர்கள் கூட வேலையை இழக்க நேரிடுகிறது. நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று சனி பெயர்ச்சி காலங்களில் பலரும் சனிபகவான் பரிகார தலங்களில் வழிபடுகின்றனர். சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்து உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். சனி பெயர்ச்சியால் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் குரு பகவான் பார்வை பலத்தால் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. அர்த்தாஷ்டம சனியால் சிரமத்திற்கு ஆளான உங்களுக்கு இனி பூர்வ புண்ணிய சனி கஷ்டத்தை போக்கப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்த மன உளைச்சல் நீங்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. புரமோசனே இல்லை என்று புலம்பியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல புரமோசன் கிடைக்கப்போகிறது. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வெளியூர் செல்வீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். இந்த ஆண்டு முதல் புதிய தொழில் தொடங்கலாம். கால பைரவரை வணங்கலாம். நாய்களுக்கு உணவளிக்கலாம்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. சனி பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் வருவது சிறப்பானதல்ல என்றாலும் நான்காம் வீட்டிற்கு அதிபதி நான்கில் அமர்வது சச மகா யோகம் தரப்போகிறது. அர்த்தாஷ்டம சனி அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள். கையில் இருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்தால் அதுவே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. பெருமாள் கோவிலுக்கு துளசி மாலை வாங்கித்தரலாம். சிவ ஆலயத்திற்கு அர்ச்சனைக்கு வில்வம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி புதிய மாற்றங்களைத் தரப்போகிறது. ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுகிறீர்கள். வெற்றிகள் தேடி வரப்போகிறது. மன குழப்பங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்க காட்டில் இனி பண மழை பொழியப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறையும் ஆர்வமும் அதிகரிக்கும். வன்னி மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசி நேயர்களே..உங்கள் ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியாக பயணம் செய்த சனி பகவான் இனி பாத சனியாக குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தலைமேல் இருந்த பாரம் நீங்கியது போல இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை விசயமாக செல்லும் பயணம் வெற்றியைத் தரும். இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி நேயர்களே..உங்கள் ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியாக அமர்வதால் வேலை செய்யும் இடங்களில் கவனமும் நிதானமும் தேவை. உங்கள் ராசி அதிபதி ஆட்சி பெற்று அமர்வதால் பண விசயங்களில் கவனம் தேவை. அலுவலகத்தில் பொறுமையும் நிதானமும் தேவை. உடன் வேலை செய்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சரியான நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. விநாயகரை வழிபடுவது நல்லது. வேலை, தொழிலில் ஏற்படும் சிக்கல்கள் தீர சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர நன்மையைத் தரும்.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனிபகவான் வருகிறார். ஏழரை சனி ஆரம்பமாகிறது. குடும்ப ராகுவும் சில தடுமாற்றங்களை ஏற்படுத்திய நிலையில் ஏழரை சனி வருவது வேலையில் சில சிரமங்களை ஏற்படுத்துகிறது. வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்பின் அருமையை தெரிந்தவர்கள் நீங்கள். புதிய வீடு, சொத்து சேர்க்கை ஏற்படும். உங்களுக்கு சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க பேரூர் பட்டீஸ்வரரை வணங்கினால் உங்களுக்கு புது வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும்.
ஆங்கில சுருக்கம்
Sani Peyarchi palan 2023: சனி பகவானின் அருள் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி புதிய வேலை கிடைக்கும். யாருடைய வேலை மாறும் என்று பார்ப்போம்.