
செய்தி
ஓய்-ஜெயலட்சுமி சி
சென்னை: தை மாதம் 03 ஆம் தேதி ஜனவரி 17, 2023ஆம் ஆண்டு சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம் கும்பம்,மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். சனிபகவான் சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி என்ன பாதிப்புகள் வரும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 6 மற்றும் ஏழாம் வீட்டு அதிபதி, கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனி பகவான் சச மகாயோகத்தை தரப்போகிறார். ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்த நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசிக்கு 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. கண்டச்சனி காலத்தில் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகளை விட அதிக நன்மையே நடைபெறும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கண்டச்சனியாக 30 மாதங்கள் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசிக்கு சனி யோகமான கிரகம் இல்லை என்றாலும் இந்த சனி பெயர்ச்சியால் இந்த நிர்வாகத்தில் தலைமை பதவியை தருவார். இம்முறை சனிபகவான் அவிட்டம், சதயம்,பூரட்டாதி 1ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் சனி பயணிக்கும் போது அதற்கேற்ப நன்மைகளை தருவார்.
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி இடமாற்றத்தை ஏற்படுத்தும். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளி நாடு செல்ல விசா கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவினர்களிடையே தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக இருந்தாலும் யோகம் காலம்தான். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் நகரும் போது தொழில் வேலையில் இடமாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசிக்கு ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களிலும் கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் சனி செல்லும் போது யோகங்கள் அதிகரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பாதிப்புகள் அதிகம் இருக்காது. எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் ஏற்படாது.

சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும். கோபத்தை கட்டுப்படுத்தவும். எந்த விசயத்திலும் கவனமும் எச்சரிக்கையும் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு கட்ட வங்கிக் கடன்கள் கிடைக்கும்.வரக்கடன்கள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இது யோகமான காலமாகும். உயர்கல்வி யோகம் தேடி வரும். தேர்வுகளை சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
சிம்ம ராசியில் உள்ள பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் உதவிதேடி வரும். திறமைகள் வெளிப்படும் உதவிகள் தேடி வருவீர்கள். வங்கிக்கடன்கள் கிடைக்கும். பண வருமானம் இரட்டிப்பாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மதிப்பு மரியாதை உயரும். பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பெண்களுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும்.
சிம்ம ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும் சுறுசுறுப்பு கூடும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்பும் பணிச்சுமையும் கூடும். பெண்களுக்கு மன சஞ்சலங்கள் அதிகரிக்கும். அரசு வழியில் நன்மைகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் கடின உழைப்பைக் கொடுத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் உதவி அவசியம். பெரியவர்களின் சொல் பேச்சை கேட்டால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். சனிக்கிழமை அனுமனை வழிபட்டால் மட்டுமே காரிய தடைகள் நீங்கி வெற்றிகள் தேடி வரும்.
சனி பெயர்ச்சி பலன் 2023: காணும் இடமெங்கும் கண்ணி வெடி..கவனமாக இருக்க வேண்டியது யார்?
ஆங்கில சுருக்கம்
ஜனவரி 17, 2023 அன்று மகரத்திலிருந்து கும்பத்திற்கு சனி பெயர்ச்சி. சிம்மம் கண்ட சனி கணிப்பின் இந்த போக்குவரத்து விளைவுகள்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: திங்கள், ஜனவரி 16, 2023, 17:01 [IST]