
செய்தி
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி. மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி இன்றைய தினம் இடப்பெயர்ச்சி அடைகிறார். தலைகணம் பிடித்து ஆடுபவர்களின் தலையில் தட்டி வைப்பார் சனி பகவான். ஆளை விடுங்க சாமி என்ற தண்ணீர் குடிக்க வைப்பார் சனிபகவான். இந்த சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் ராஜாதி ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகிறீர்கள். அனுபவ பாடங்களைக் கற்றுக்கொள்ளப்போகிறார் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார். கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார்.
மேஷம்
சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், ஜீவன கர்ம ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதி. சனி பகவான் லாப ஸ்தானமான கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். சனி பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழாப்போகிறது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஸ்மார்ட் ஆக வேலை செய்வீர்கள். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் வேலையைப் பற்றியோ, தொழிலில் கிடைக்கும் லாபத்தைப் பற்றியோ யாரிடமும் பெருமை பேசாதீர்கள். உங்களின் தொழில் வளர்ச்சி மளமளவென அதிகரிக்கும். பண வருமானமும் பொருளாதார நிலையும் திருப்திகரமாக இருக்கும். மார்ச் மாதத்தில் சனி பகவான் உதயம் நிறைய நன்மைகளை செய்யப்போகிறது. சனிபகவானின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டின் மீதும் 8 ஆம் வீடான அஸ்டம ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் கண்டங்கள் விலகும். பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குரு பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால் 2023ஆம் ஆண்டு பொருளாதார உயர்வும் மன மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. சனிக்கிழமையும் செவ்வாய்கிழமையும் அனுமனை வழிபட சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

ரிஷபம்
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டு அதிபதி. கர்ம ஸ்தான அதிபதி கர்ம ஸ்தானம், தொழில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. அதிர்ஷ்டம் வேலை செய்யப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சில நேரங்களில் திருப்தியற்ற நிலை உண்டாகும். இலக்குகளை அடைய நிறைய போராட வேண்டும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவானால் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் பொறுமை அவசியம். நிதானமாக செயல்பாடுகளே உங்களை உற்சாகமாக செயல்பட வைக்கும். அலுவலக உயரதிகாரிகளின் செயல்பாடுகள் பொறுமையை சோதிக்க வைக்கும். வேலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகும். வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். தொழில் ஸ்தான சனியால் அலுவலக பிரச்சினைகளும் உயர் அதிகாரிகளுடனான மோதல் போக்கு அதிகரிக்கும். அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. அதே நேரத்தில் மார்ச் மாதம் முதல் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த வேலையாக இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதை தவிர்க்க வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நிதானமாக செய்வது நல்லது. வாகன பயணங்களிலும் நிதானமும் கவனமும் தேவை. பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். நவம்பர் 4ஆம் தேதி முதல் சனிபகவான் நேர்காணலில் பயணம் செய்யும் போது உங்களின் சிரமங்கள் முடிவுக்கு வரும்.

மிதுனம்
சனி பெயர்ச்சி உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சனிபகவான் இன்று முதல் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். வெளிநாடு யோகம் தேடி வரப்போகிறது. சனி பகவான் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டை சனி பார்வையிடுவதால் இளைய சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். பண வருமானம் வந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு வெற்றியைத் தரப்போகிறது. இது நாள் வரைக்கும் ஏற்பட்ட சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை. புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.மன அழுத்தங்கள் நீங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளுக்கு வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். உடன்பிறந்த சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கை கூடி வரும். ஆறாம் வீட்டு அதிபர் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும் நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சனி தரும் சந்தோஷங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ஆங்கில சுருக்கம்
சனிப்பெயர்ச்சி பலன் 2023 தமிழ்: இந்த சனிப்பெயர்ச்சி யாருக்கு ராஜாதி ராஜயோகம் கிடைக்கும்: சனிப்பெயர்ச்சி மகரத்தில் இருந்து கும்பம் வரை ஜனவரி 17, 2023 முதல் 2025 வரை. இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும், தங்கமும் பணமும் கிடைக்கும்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: செவ்வாய், ஜனவரி 17, 2023, 11:27 [IST]