
பொங்கல் பண்டிகை
செர்சாட் தளத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு ஊழியர், பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு இன்று காலை தனது லேப்டாப்-ல் அலுவலக ஈமெயில் ஐடியை திறக்க முயன்று உள்ளார், லாக்இன் செய்ய முடியவில்லை. முதலில் அந்த ஊழியர்கள் பாஸ்வோர்டு எக்ஸ்பியரி ஆகியிருக்கும் என நினைத்துள்ளார்.

லாக்இன்
ஆனால் தொடர்ந்து 2, 3 முறை முயற்சி செய்தும் லாக்இன் செய்ய முடியாத நிலையில், அவருடைய அக்கவுண்ட் டிஸ்ஏபிள் ஆகியுள்ளது என்றும் நிர்வாகி-ஐ அனுகும்படி தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தச் செர்சாட் ஊழியர்கள் தனது சக ஊழியரிடம் கேட்டு உள்ளார், அதில் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்துள்ளார்.

பர்சனல் ஈமெயில்
அதன் பின்பு தான் செர்சாட் நிர்வாகம் அந்த ஊழியரின் பர்சனல் ஈமெயில்-க்குப் பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தி செர்சாட் நிறுவனத்திடம் வந்துள்ளது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார், தான் எப்போதும் இந்தப் பணிநீக்கம் செய்யப்படும் அணியில் இருக்கமாட்டார் என நினைத்துக்கொண்டு இருந்த நிலையில், இந்தச் செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

மொஹல்லாடெக் சிஐஓ
ShareChat மற்றும் Moj ஆகிய தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech சிஐஓ-வான அங்குஷ் சச்தேவா இன்று வெளியிட்டுள்ள தகவல் படி இந்தப் பணிநீக்க சுற்றில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

600 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்தப் பணிநீக்கத்தின் மூலம் 500 முதல் 600 ஊழியர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பணிநீக்கத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் சம்பளம் வாங்குவோரை அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஈமெயில், ஸ்லாக் கட்
MohallaTech நிர்வாகம் தனது ShareChat மற்றும் Moj ஆகிய தளங்களில் 500க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், அவர்களுக்குப் பணிநீக்கம் அறிவிப்பை அறிவிக்கும் முன்னரே ஈமெயில், ஸ்லாக் போன்ற அனைத்து கம்யூனிகேஷன் ஆக்சஸ்-ஐ நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சம்பளம்
மொஹல்லாடெக் நிர்வாகம் 500க்கும் அதிகமான ஊழியர்களைத் தடாலடியாகப் பணிநீக்கம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது நோட்டீஸ் பீரியட் காலத்திற்கான சம்பளம் மற்றும் மொஹல்லாடெக் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 15 நாள் சம்பளத்தைக் கொடுத்ததாகத் தெரிகிறது.

போனஸ் தொகை
இதேபோல் செயல்திறன் போனஸ் தொகை டிசம்பர் 31 வரை 100 சதவீதம் சார்பு அடிப்படையில் கொடுக்கப்பட உள்ளது. இதோடு நிலுவையில் உள்ள விடுமுறை நாட்களுக்கும் சம்பளத்தை அளிக்கப்படுகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் ஜூன் 30 வரை நிறுவனத்தின் ஹெல்த் இன்சூரன்ஸ் நடைமுறையில் உள்ளது.

லேப்டாப், ஸ்மார்ட்போன், ESOP
இதேவேளையில் MohallaTech நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட லேப்டாப், ஸ்மார்ட்போன் ஆகியவற்றைத் தங்களே வைத்துக்கொள்ளலாம் எனச் சிஐஓ-வான அங்குஷ் சச்தேவா மின்னஞ்சலில் இருப்பதாகத் தகவல் வெளியானது, ஆனால் இதை நிர்வாகம் உறுதி செய்யவில்லை, மேலும் ஏப்ரல் 30, 2023 வரையில் ESOP-ஐ ஊழியர்களை வைத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.