
மத்தியப் பிரதேசம் பாலகாட் பகுதியில் ஜனவரி 18ஆம் தேதி மாலை அங்குள்ள வைகங்கா ஆற்றுப் பாலத்தில் இருந்து ஒரு நபர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணிநேரம் தேடி உடலை மீட்டது. உயிரிழந்த நபரை அடையாளம் கண்டு தற்கொலைக்கான காரணத்தை விசாரித்த போது தான் அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. உயிரிழந்தவர் 35 வயதான வாசுதேவ் பாட்லே. இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தையை எதிர்பார்த்த நிலையில், மனைவி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 18ஆம் தேதி அன்று பிரசவம் நடந்துள்ளது.
பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மீண்டும் இரட்டை பெண் குழந்தை பிறந்ததால் வசுதேவ் மனம் கலங்கி விரக்தி அடைந்துள்ளார். நீண்ட நேரம் சோகமாக இருந்த அவர் மருந்து வாங்கப் போகிறேன் என்று சொல்லி மருத்துவமனையை விட்டு வெளியேறி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.10 ரூபாய் நோட்டுகளை எண்ணி திணறிய மணமகன்.. மணமகள் எடுத்த அதிரடி முடிவு.. போலீசாரிடம் சென்ற பஞ்சாயத்து..!
வசுதேவ்வுக்கு சொந்தமாக 14 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் விவசாயம் செய்து வந்துள்ளார். தினசரி கூலி வேலையும் இவர் பார்த்துள்ளார். பெண் குழந்தைகள் பிறந்தது மட்டும் தான் இந்த தற்கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப தகராறு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: