
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி நகர ராமகிருஷ்ணா காலனியில் சில விலங்குகளின் கொழுப்பு, எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் பிழிந்து தேவையான சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வீட்டில் ஏராளமான அளவில் செய்யப்பட்ட பசுவின் தோல்கள், வெட்டப்பட்ட பசுவின் உடல், வெட்டப்பட்ட கட்டி வைக்கப்பட்டிருந்த பசுக்கள், பசுக்களின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், கலப்படம் எண்ணெய் உடன் கூடிய டின்கள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போலீசாருடன் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்த கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக சென்றுள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விலங்குகளின் உடல் பாகங்களில் இருந்து பிழிந்த எண்ணெய் பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் உணவகங்கள் மற்றும் உள்ளூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சப்ளை செய்வதாக அவர்கள் அறிவித்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கலப்பட எண்ணெய் கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: