
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் சத்திச்சா சானே. அம்மாநிலத்தின் பால்கார் பகுதியைச் சேர்ந்த இவர் இவர் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரி தேர்வுக்காக வீட்டில் இருந்து மும்பை வந்துள்ளார். 2021 நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின் சனேவை காணவில்லை. அவரது குடும்பத்தினர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற நிலையில், அவர் கிடைக்காததால் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
மும்பை போலீஸ் மாணவியின் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்ததில் அது கடைசியாக மும்பை பாந்தரா கடற்கரை பகுதியில் இயங்கியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அங்கு உள்ள நபர்களிடம் மாணவியின் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். அதில் மாணவி கடற்கரையில் பாதுகாப்பு லைப்கார்டாக நின்றுகொண்டிருந்த மித்து சிங் என்ற நபரிடம் பேசியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிங்கை பிடித்து காவல்துறை விசாரித்துள்ளது.
முதலில் மித்து சிங் பெண்ணிடம் சாதாரணமாக பேசினேன் அவ்வளவு தான் தெரியும் என்று மழுப்பலாக பேசி விசாரித்துள்ளார். தொடர்ந்து சிசிடிவி பதிவுகள் மற்றும் அங்குள்ள சாட்சிகள் விசாரித்த போது உண்மைகள் மெல்ல வெளியே வரத் தொடங்கியது. சம்பவ தினத்தன்று அந்த பெண் மித்து சிங்கிடம் நீண்ட நேரம் பேசியதாகவும், கடற்கரையில் அவர் நடத்தும் உணவகத்தில் சென்று சாப்பிட்டு கடற்கரை பாறாங்கற்களில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதும் தெரியவந்தது.
எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை மித்துவின் போனில் இருந்து போலீசார் கைப்பற்றினர். சந்தேகம் வலுக்கவே மித்து சிங் மற்றும் அவரது கூட்டாளி அப்துல் ஜாபர் என்ற இருவரை காவல்துறை கடந்த வாரம் கைது செய்து விசாரித்தது. இந்நிலையில், மாணவியை கொலை செய்து கடலில் வீசியதாக மித்து சிங் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதற்கு அப்துல் ஜாபாரும் உதவியதாக கூறியுள்ளார்.
இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறிய நிலையில், குற்றத்தின் முழு பின்னணி விரைவில் வெளியே வரும் என்று கூறியுள்ளனர். மாணவி மாயமாகி சுமார் ஒரு வருடம் தாண்டிய நிலையில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையின் 13 மாத தொடர் விசாரணையில் மாணவி கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: