
சென்னை: சர்ச்சை கருத்துகள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகா பிப்.10ல் எழுத்துபூர்வ விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர் ஷர்மிகாவிடம் நேரில் விசாரணை நடத்திய பின்னர் இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். விசாரணையின்போது மருத்துவர் ஷர்மிகா மீது எழுப்பப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. உடல் எடை குறைப்பு, குழந்தை பிறப்பு உள்ளிட்டவை குறித்து சித்த மருத்துவர் ஷர்மிகா சர்ச்சையான கருத்துகளை கூறியிருந்தார்.