
கோவில் நகரம் என புகழ்பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் 3000 ஆண்டுகள் பழமையான மண் ஸ்தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கும், சக்தி தலங்களிலும் முக்கிய தலமாக விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவில்.
இந்நிலையில், கந்தபுராணம் அரங்கேறிய குமரக்கோட்டம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, வெள்ளித்தேர் உற்சவத்தை ஒட்டி சுவாமி சுப்பிரமணிய முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சம்பங்கி பூ, ரோஜா பூ, ஏலக்காய், மாலை அணிவித்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் எழுந்தருளியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதையடுத்து, வெள்ளித்தேரில் வீதி உலா வந்த சுப்பிரமணிய சுவாமி முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.