
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ என்ற ஹிட் படத்தை கொடுத்த அனுதீப் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. கடந்தாண்டு தீபாவளி வெளியீடாக ரிலீசான இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியான ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘மண்டேலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மேடன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக இந்தப் படம் உருவாகி வருகிறது. அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தனுஷ்: ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தமா.?: வெளியான லேட்டஸ்ட் தகவல்.!
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட விமர்சனங்கள் மற்றும் வசூல்ரீதியாக வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் முருகதாஸ். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் ‘தர்பார்’ படத்தை இயக்கினார்.
RK Suresh: புதிதாக பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்: நடிகர் ஆர்.கே. சுரேஷ் உருக்கம்.!
இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமரான வரவேற்பையே பெற்றது. இதையடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார் ஏ.ஆர். முருகதாஸ். இந்நிலையில் தான் சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.