
சத்ய நாராயண் மஹாராணா என்பவர் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பையைக் கொண்டாடும் விதமாக, மரத்தால் சிறிய ஹாக்கி குச்சிகளை உருவாக்கி எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். இவர் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு மினியேச்சர் கலைஞர் ஆவார். தற்போது இவர் உலகின் மிகச்சிறிய இரண்டு ஹாக்கி ஸ்டிக்குகளை உருவாக்கி உள்ளார். உலக கோப்பை ஹாக்கி தொடங்கி உள்ள நிலையில் இவரின் குட்டி ஹாக்கி ஸ்டிக்குகள் தற்போது வைரலாகி வருகிறது.
பெர்ஹாம்பூரில் வசிக்கும் மினியேச்சர் கலைஞர் சத்ய நாராயண் மகாராணா, ஓவியம் மற்றும் சிலைகளை செதுக்குவதில் வல்லமை பெற்றவர். இவரின் திறமையால் இரண்டு ஹாக்கி குச்சிகளையும் 30 நிமிடங்களில் உருவாக்கினார். ஒரு குச்சியின் உயரம் 5 மிமீ மற்றும் அதன் அகலம் 1 மிமீ. மற்றுமொரு குச்சியின் அளவு 1 செ.மீ உயரமும், 1 மி.மீ அகலமும் கொண்டது. இவை மகாராணா அவர்களின் கண்ணின் அளவை விட மிக சிறியவை. இந்த நிகழ்வு குறித்து பேசிய மஹாராணா, “ஒடிசா இந்த ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவதால், ஒடிசாவை சேர்ந்த ஒரு கலைஞராக தான் இருப்பதால், அனைத்து ஹாக்கி வீரர்களுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், தன்னால் முடிந்த விழிப்புணர்வு முயற்சியாகவும் இது இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், கின்னஸ் புத்தகத்தில் தனது கலைப்படைப்பு உலகின் மிகச்சிறிய ஹாக்கி ஸ்டிக்காக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும் என்று மகாராணா நம்புகிறார். இதுவரை இவர் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய சாதனைகளை மினியேச்சர் கலைப்பொருட்களை கொண்டு உருவாக்கினார். இவரின் பல சாதனைகள் வைரலாகியும் உள்ளன. இவரின் திறமையை பல தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். இவரின் சமூக ஊடக பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கப்புச்சின் வகை குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண்மணி! எப்படி சாத்தியமானது?
இதே போல், பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், 500 ஹாக்கி பந்துகள் மற்றும் ஐந்து டன்களுக்கு மேல் மணலைப் பயன்படுத்தி ஹாக்கி ஸ்டிக்கின் பாரிய மணல் அமைப்பை உருவாக்கி அசத்தினார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 105 அடி நீளமுள்ள இந்த மணல் ஓவியம் உலகின் மிக நீளமான மணல் ஹாக்கி ஸ்டிக் என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்டாக்கில் உள்ள மகாநதி ஆற்றின் கரையில் மணல் கட்டமைப்பை முடிக்க பட்நாயக் மற்றும் 15 மாணவர்கள் கொண்ட குழு இரண்டு நாட்கள் செலவு செய்தது. இன்ஸ்டாகிராம் வாசிகள் பட்நாயக்கின் இந்த அற்புதமான ஓவியத்தை வெகுவாகப் பாராட்டி மணல் வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.