
சென்னை: எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. பிற்பகல் 1.10க்கு புறப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.40க்கு புறப்படும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில்களில் பயணிக்க நாளை முதல் முன்பதிவு தொடக்கம் என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.