
நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டி: இந்திய களத்தில் டெஸ்ட் போட்டியை வெல்வது மிகவும் கடினம். எங்களால் ஒரு மலையை சாய்க்க முடியுமா? என்ற சவால் தான் இந்தியாவை வீழ்த்துவது. ஒருவேளை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் அது எங்களுக்கு ஆஷஸை விட பெரியதாக இருக்கும், என்றார்.இதேபோன்ற கருத்தை வார்னரும் கூறியுள்ளார். இந்திய தொடரை அவளுடன் எதிர்பார்த்துள்ளேன்.
எப்போதுமே அது கடினமாக தான் உள்ளது. இந்த முறை ஒரே ஒரு நோக்கம் மட்டுமே எனக்கு உள்ளது. தலை உலகின்சிறந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக எனது திறமையை காட்டப்போகிறேன். ஆஷஸ் தொடரில் விளையாடியது சிறப்பாக இருந்தது. ஆனால் இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினமான சவால், என்றார்.