
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்வுடன் 60,708 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18,076 க்கும் குறைவாக இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்திருந்த பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி புதன்கிழமை வர்த்தகத்தைத் தொடங்கின. காலை 09.41மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 88.48 புள்ளிகள் உயர்வடைந்து 60,744.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி14.25 புள்ளிகள் உயர்ந்து 18,067.55 ஆக இருந்தது.
உலக அளவில் நிலவிய மாற்றங்கள் இல்லாத நிலையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகளும் இன்றைய வர்த்தகத்தை ஏற்றம் இறக்கம் இல்லாமல் நேர்மறை சூழலில் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை டாடா ஸ்டீல், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, எல் அண்ட் டி, ஈசியன் பெயின்ட்ஸ், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன. எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.