
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடனே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிவடைந்து 60,825 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் சரிவடைந்து 18,073 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தின் வீழ்ச்சியுடன் தொடங்கின. காலை 09:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 282.61 புள்ளிகள் சரிந்து 60,696.14 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74.60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,043.70 ஆக இருந்தது
உலகளாவிய சந்தைகளில் நிலவிய குழப்பமான சூழ்நிலை, நிதி மற்றும் வங்கிப்பங்குகளின் சரிவு, மாதத்தின் கடைசி வியாழனன்று காலாவதியாகும் எஃப் அண்ட் ஓ பங்குகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதால் பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தக வீழ்ச்சியுடன் தொங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. மறுபுறம் ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, விப்ரோ, ஈசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.