
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தை சுந்தர் சியின் அவ்னி மூவிஸ் சார்பாக குஷ்பு தயாரித்தார். முதல் இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 அதிக பொருட் செலவில் படமாக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சுமரான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் ‘காபி வித் காதல்’ படத்தை இயக்கிய சுந்தர் சி.
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், சம்யுக்தா ஹெக்டே, டிடி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் வெளியான ‘காபி வித் காதல்’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெறவில்லை. இந்நிலையில் ‘அரண்மனை 4’ படத்தை இயக்கும் வேலைகளில் சுந்தர் சி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வர்சியு: அந்த புருடாவை மன்னிக்கவே முடியாது: வாரிசை ரவுண்டு கட்டும் புளூ சட்டை மாறன்.!
மேலும் விஜய் சேதுபதி இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதான வரவேற்பை பெறாத நிலையில், அரண்மனை சீரியஸில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Varisu vs Thunivu: மீண்டும் மோதலில் விஜய் – அஜித்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!