
ஊழியர்கள் கருத்து
கூகுளில் நாங்கள் 16 வருடங்களாக பணிபுரிந்தோம், ஆனால் நாங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி, நள்ளிரவில் பணி நீக்கம் செய்து விட்டோம். இது மிகவும் வேதனையளிக்கிறது. இங்கு விசுவாசம் என்பதே கிடையாது என்றும் சமூக வலைதளத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் பதிவிட்டுள்ளனர்.
இதே 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், இன்று 1 வாரத்தில் தான் பிரசவ விடுமுறைக்காக செல்லவுள்ள நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, இதனை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பணிநீக்கம் இல்லாவிட்டால்?
இப்படி பற்பல கருத்துகளுக்கு மத்தியில் இது குறித்து கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, ஊழியர்களிடம் பணி நீக்கம் என்பது இல்லாவிட்டால் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் என்பது சரிவினைக் காணலாம் என தெரிவித்துள்ளார்.

தெளிவான தீர்க்கமான முடிவு
ஒரு கூட்டத்தில், நிறுவன தலைவர்கள் மற்றும் இயக்குனர் குழு உறுப்பினர்களிடம் 6% பணி நீக்கம் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
நீங்கள் தெளிவாகவும், தீர்க்கமாகவும் திட்டமிட்டு முன் கூட்டியே செயல்படவில்லை எனில், பிரச்சனை இன்னும் மோசமாகலாம். ஆக இவை நான் எடுக்க வேண்டிய முடிவுகள்.

போனஸ் குறையும்
அதேபோல இந்த முறை போனஸிலும் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் குறிப்பிடத்தக்க சரிவினைக் காண்பார்கள்.
கடந்த வார இறுதியில் பணி நீக்கம் குறித்து வெளியிட்ட சுந்தர் பிச்சையின் இந்த முடிவானது, பல மாதங்களாக இருக்கலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்த வேலைக் குறைப்புகளை அனைத்துமே மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டு கையாளப்பட்டது என்றும் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

வெகுமதி உண்டா?
இதற்கிடையில் மற்றொரு தரப்பினர் நீண்டகாலமாக நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் பல ஊக்குவிப்பு சலுகைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும், பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் உடனடியாக தங்களுக்கான அடுத்த வேலைகளைப் பெறுவது கடினம். அதோடு கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் என பல நிறுவனங்களும் இதே பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதிலும் பலரும் இந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் எனலாம்.

விசா மூலம் பணியாற்றிய ஊழியர்களின் நிலை?
குறிப்பாக விசா மூலம் பணியாற்றும் இந்திய புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட, பலர் 60 நாட்கள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படி கிடைக்காவிடில் மீண்டும் குடும்பத்துடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர்.