
இப்படி, உலகக் கோப்பையை வென்ற அணிகள்தான் கோப்பை வென்றிருப்பதால், இம்முறை 2023ஆம் ஆண்டிலும் இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மேலும், ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் டெஸ்ட் உலகக் கோப்பை பைனலுக்கு இந்தியா தேர்வாக வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், இந்த வருடத்தில் இரண்டு கோப்பைகளை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜ் போன்றவர்கள் சமீப காலமாக தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவதும் இந்திய அணியின் கோப்பை வெல்லும் வாய்ப்பை பிரகாசமாக வைத்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பைனலுக்கு முன்னேற ஒரேயொரு சிக்கல்தான் உள்ளது. பிப்ரவரியில் துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் தொடரில், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் அல்லது சமன் செய்ய வேண்டும். இப்போதுதான், பைனலுக்கு முன்னேற முடியும். ஆஸ்திரேலிய அணியுன் முரட்டு பார்மில் இருந்தாலும், 4 ஸ்பின்னர்களை அவர்கள் அழைத்து வந்தாலும், இந்திய அணிக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இப்படி ஆஸ்திரேலிய அணி ஏற்படுத்தும் சவால்களை சமாளிக்க கோலி இதை செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் பேசினார்.
கவாஸ்கர் பேட்டி:
அதில், ”ஒரு வீரர் முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால், இந்திய அணிக்கு அடுத்தடுத்து அட்டவணைகள் உள்ளன, அதற்கு சாத்தியங்கள் குறைவு. 25 ஆண்டுகளுக்கு முன்பு, சச்சின் சர்வதேச தொடர்களில் பங்கேற்பதை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியா சென்று, அங்கு உள்ளூர் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இரட்டை சதமும் அடித்தார். அதன்பிறகு, ஆசிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் அதிவிரைவாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். கோலியும் இதனை செய்ய வேண்டும்”
”நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகி, முதல்தர போட்டியான ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான், ஆசிக்கு எதிராக சொந்த மண்ணில் கோலியால் அசால்டாக ரன்களை குவிக்க முடியும்” எனக் கூறினார்.