
போன்ற காலகட்டம்
பொதுவாக ஐடி நிறுவனங்கள் பலவும் காலக்கட்டத்திலேயே அதிக ஊழியர்கள் தேவை மற்றும் அதிகளவிலான அட்ரிஷன் காரணமாக பிரேஷ்ஷர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்திக் கொண்டனர். இது ஐடி பிரஷ்ஷர்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனினும் இந்த போக்கானது சமீபத்திய மாதங்களாகவே குறைந்துள்ளது.

தேவை சரிவு
தற்போதைய சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினை கண்டுள்ளது. இது ஐடி துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. பல டெக் ஜாம்பவான்கள் கூட பணி நீக்கம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இன்றும் பிரெஷ்ஷர்களை பணியமர்த்தி வருவது, ஐடி துறையினர் மத்தியில் பெரும் ஆறுதலை உருவாக்குவது எனலாம்.

டிசிஎஸ்-ன் திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் நிறுவனம், 2024ம் நிதியாண்டில் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தலாம் என தெரிவித்துள்ளது.
இதே விப்ரோ நிறுவனம் மூன்றாவது காலாண்டில் நிகரலாபமாக 30.5 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவானது, ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக 1 ரூபாய் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

மார்ஜின் வளர்ச்சி
விப்ரோ நிறுவனத்தின் வருவாய் விகிதம் 232.3 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 203 பில்லியன் ரூபாயாகவும் இருந்தது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட், மார்ஜின் விகிதம் 120 அடிப்படை புள்ளிகளாகவே மேம்பட்டுள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 4வது காலாண்டாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் சிறப்பானதொரு உறவு இருந்து வரும் நிலையில், நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது.

பணியமர்த்தல் திட்டம்
விப்ரோ நிறுவனம் சுமார் 8000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து http://careers.wipro.com/ என்ற தளத்தில் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.