
சென்னை: அனைத்து இந்திய மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கையை அனுமதிக்க வேண்டும். இந்த முடிவு சாமானிய மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே நெருக்கத்தை உண்டாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.