
ஸ்விக்கி
ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனத்தின் நஷ்ட அளவு, கடந்த நிதியாண்டில் 1,617 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 3,629 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் நடப்பு நிதியாண்டில் மொத்த செலவுகள் 131 சதவீதம் அதிகரித்து 9,574.5 கோடி ரூபாயாக உள்ளது.

நிதிநிலை
கடந்த ஆண்டு நிதிநிலை மிகவும் மோசமாக மாறிய நிலையில் பணிநீக்கம் குறித்த முடிவு நவம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட நிலையிலும், ஜனவரி மாதம் பிற முன்னணி டெக் நிறுவனங்களின் பணிநீக்க அறிவிப்புக்கு மத்தியில் ஸ்விக்கி தனது பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

600 பேர் பணிநீக்கம்
ஸ்விக்கி தனது முடிவுகளைப் பார்க்கும்போதே அதன் நெருக்கடி புரிந்துகொள்ள முடிகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 600 பேர் பணிநீக்கத்தில் பிராடெக்ட், இன்ஜினியரிங் மற்றும் ஆப்ரேஷன்ஸ் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

IPO வெளியிட திட்டம்
2023 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிட திட்டமிட்டு உள்ள ஸ்விக்கி, ஐபிஓ வெளியிடும் முன்பு லாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் என இலக்கை கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகவும் மோசமான நஷ்டத்தைப் பதிவு செய்த பின்பு பணிநீக்கத்தை தெரிவிக்கிறது.

ஊழியர்களின் உதவி
ஸ்விக்கி நிறுவனத்தின் மளிகை பொருட்கள் மற்றும் உணவு டெலிவரி தளத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் அக்டோபர் மாதம் மறு ஆய்வு செய்து முடித்த நிலையில் தற்போது 600க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

PIP திட்ட ஊழியர்கள்
Swiggy நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களுக்கும் செயல்திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு அளவைக் கொண்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் 2-க்கு கீழே வருபவர்கள் பொதுவாக PIP திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான மக்கள் இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்கள் தான்.

சோமேட்டோ பணிநீக்கம்
ஸ்விக்கியின் சக போட்டி நிறுவனமான சோமேட்டோ நவம்பர் மாத செலவுகளைக் குறைக்கவும், வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யவும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இது மட்டும் அல்லாமல் ஐபிஓ வெளியிட்டது 1 வருடம் முடிந்த பின்பு துணை நிறுவனங்கள் உட்படப் பலர் வெளியேறினர்.

Dineout நிறுவன கைப்பற்றல்
ஸ்விக்கி மளிகை பொருட்கள் மற்றும் உணவு டெலிவரியில் மட்டுமே இருந்த நிலையில் சமீபத்தில் சோமேட்டோவுக்குப் போட்டி அளிக்கும் வகையில் ரெஸ்டாரன்ட் டிஸ்கவரி பிரிவில் இறங்கும் Dineout என்னும் நிறுவனம் 120 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மே 2022 ஆம் ஆண்டு கைப்பற்றியது. ஆனால் கணிக்கப்பட்ட அளவுக்கு இதன் மூலம் புதிய வர்த்தகம், வருவாய்க் கிடைத்ததாக ஸ்விக்கி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.